Advertisment

குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

3 people including two from Tamil Nadu issue in Kuwait

Advertisment

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆசிப், முகமது ஜூனைத் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மற்றொருவரும் என மூன்று பேர் குவைத் நாட்டில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்தனர். இத்தகைய சூழலில் தான் அங்கு நிலவி வரும் கடும் குளிர்காரணமக குளிர் காய்வதற்காக தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் 3 பேர் அந்த அறையிலேயே உறங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அறையில் பரவிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூரைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் தீ புகையால் மூச்சு திணறி குவைத் நாட்டில் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

incident Cuddalore Kuwait
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe