Advertisment

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட 272 பேர் உயிரிழப்பு...பரிதாபத்தில் தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கையில்ஈடுக்கப்பட்டிருந்த ஊழியர்கள்272 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தோனேஷியாவில் கடந்த 17ஆம் தேதி அதிபர் மற்றும் துணை அதிபர்,நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைக்கான தேர்தல் ஒன்றாக நடைபெற்றது.

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தேர்தல் செலவுகளை குறைக்கும் வகையில் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில், சுமார் 19 கோடியே 30 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் 5 வாக்குகள் பதிவு செய்த நிலையில் கடந்த 10 நாட்களாக இரவு பகலாக தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர் பணிச்சுமை காரணமாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு வரை 272 பேர் உயிரிழந்ததாகவும், 1878 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும்

இந்தோனேஷிய தேர்தல் ஆணையம் பரிதாபத்துடன்தெரிவித்துள்ளது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடுத்த மாதம் 22ம் தேதி அறிவிக்கப்படும் நிலையில் மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

death election commission elections Indonesia
இதையும் படியுங்கள்
Subscribe