Skip to main content

கடலில் 27 மணிநேர போராட்டம்... டோங்கோ சுனாமியில் உயிர் பிழைத்த முதியவர்!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

27 hours of struggle at sea ... the old man who survived the Tongo tsunami!

 

பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள டோங்கோ நாட்டில் கடந்த 14 ஆம் தேதி ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியிலிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. கடலுக்குள் 260 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 கிலோமீட்டர் உயரத்தில் எரிமலை வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியில் சுனாமி அலை உருவானதை அடுத்து தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

 

டொங்கோ-வில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ள நிலையில் இதன் பாதிப்பு வருங்காலங்களில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சுனாமி பேரலையால் 5 நாட்களுக்கு பிறகே டோங்கோ நாடு வெளி உலக தொடர்புக்கு வந்தது. இந்நிலையில் நிலைகுலைந்துபோன டோங்கோ எரிமலை வெடிப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து உருவான சுனாமியில் சிக்கிய 57 வயது முதியவர் ஒருவர் 27 மணி நேரமாக தொடர்ந்து கடலில் போராடி நீந்தி உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

இந்த சுனாமி பேரலையில் 57 வயது மாற்றுத்திறனாளி முதியவர் லிஷாலா ஃபெலாவு அடித்துச் செல்லப்பட்டார். சுமார் ஒன்பது முறை கடல் நீரில் மூழ்கிய போதும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தொடர்ந்து நீந்திய மாற்றுத்திறனாளி முதியவர், தொடர்ந்து 27 மணி நேரம் போராடிக் கரை சேர்ந்ததாகத்  தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.