25 year old jeevan thondaman gets state minister post

Advertisment

புதிதாகப் பொறுப்பேற்ற இலங்கை மத்திய அமைச்சரவையில், 25 வயதான ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அவையைக் கலைத்து தேர்தல் நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனையடுத்து அங்கு கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் ராஜபக்சே தலைமையிலான கூட்டணி 150 இடங்களைக் கைப்பற்றியது. இவற்றுள் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனக் கட்சி 145 இடங்களைத் தனித்து வென்று ஆட்சியமைத்துள்ளது. இதற்கான அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்ச்சி நேற்று கண்டியில் நடைபெற்றது.

Advertisment

இதில், மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மகனும், நுவரா - எலியா தொகுதி எம்.பி -யுமான ஜீவன் தொண்டமான் எஸ்டேட் குடியிருப்பு மற்றும் சமூக கட்டமைப்பு வளர்ச்சிதுறை இணையமைச்சராகபொறுப்பேற்றார். 25 வயதான ஜீவன் தொண்டமான் சென்னை மற்றும் கோவையில் பள்ளிப்படிப்பை முடித்து, நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இதனையடுத்து லண்டனில் பயிற்சி பெற்ற அவர், கடந்த ஆண்டு ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்குபிறகு அரசியலில் களம் கண்டார். இளைஞர்களின் ஆதரவை அதிகம் பெற்ற ஜீவன் தொண்டமான் மலையகதமிழர்கள் வசிக்கும் பகுதியான நுவரா - எலியா பகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.