ஒரே இரவில் ரூ. 27,000 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்... பெற்றோரின் இன்ப அதிர்ச்சி...

24 வயதான இளைஞர் ஒருவர், அவரது பெற்றோர் கொடுத்த பரிசின் காரணமாக ஒரேநாளில் 27,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ள சம்பவம் ஹாங்காங்கில் நடந்துள்ளது.

24 year old youth became overnight billionaire

சீனாவை சேர்ந்த 24 வயதான எரிக் ஸி என்ற வாலிபரின் தந்தை ’சினோ பையோபார்மாகியூடிகல்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 24 வயதான தனது மகனுக்கு பரிசளிக்க நினைத்த தந்தை, சினோ பையோபார்மாகியூடிகல் நிறுவனத்தின் 2.7 பில்லியன் பங்குகளை தனது மகனின் பெயருக்கு மாற்றியுள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 27,000 கோடி ரூபாய் ஆகும். எரிக் ஸியின் தந்தை நடத்தி வரும் சினோ பையோபார்மாகியூடிகல் நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் தாய்லாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தொழில் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

billionaire china hong kong
இதையும் படியுங்கள்
Subscribe