train

Advertisment

துருக்கியில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டு 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் வடக்கில்இஸ்தான்புல்நோக்கிசென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று நேற்று மாலைடெகிர்டாக் பகுதியில் சரிகார் என்ற கிராம பகுதியில் தடம்புரண்டது.

மொத்தம் 376 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் விலகின. இப்படி திடீரென ஏற்பட்ட ரயில் விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் 76 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அங்கு நிலவிய அசாதாரண சீதோஷண நிலையே இந்த ரயில் பெட்டி தடம்புரள காரணம் என கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த திடீர் விபத்தால் அங்கு 100 ஆம்புலன்ஸ் மீட்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து துருக்கியின் துணை பிரதமர் ரெசெப் அக்தக் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.