காங்கோ நாட்டின் கோமா நகரத்தில் இருந்து பிஸி பி என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டார்னியர் 288 ரக விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு பெனி நகரத்துக்கு அந்நாட்டு நேரப்படி காலை 9 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும், விமான விபத்தை வடக்கு கிவு கவர்னர் மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.
Follow Us