Skip to main content

தூண்டிலில் சிக்கிய ரூ.23 கோடி மதிப்புள்ள அரியவகை மீன்... மீன்பிடி குழு செய்த நெகிழ வைக்கும் செயல்...

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

இந்திய மதிப்பில் ரூ.23 கோடி ரூபாய் மதிப்புள்ள மீனை பிடித்த குழுவினர் அதனை மீண்டும் கடலிலேயே விட்டுள்ளனர்.

 

23 crore rupees worth tuna fish caught near ireland

 

 

அட்லாண்டிக் கடலில் மீன்களின் வளத்தைப் பெருக்க மீன்களைப் பிடித்து அதனை கடலின் வேறு பகுதியில் மீண்டும் விடுவதற்கு சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அப்படி, அயர்லாந்து கடற்பரப்பில் வெஸ்ட் கார்க் பகுதியைச் சேர்ந்த டாவ் எட்வர்ட்ஸ் என்பவரின் தூண்டிலில் சூறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 8.5 அடி நீளமும், 270 கிலோ எடை உடைய இந்த மீனின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.23 கோடி ஆகும்.  

இவ்வளவு விலைமதிப்பு மிக்க அரியவகை மீன் தங்கள் தூண்டிலில் மாட்டியும், தங்கள் வணிக ரீதியாக மீன்களைப் பிடிக்கவில்லை என்றும், மீன் வளத்தை பெருக்கவே தாங்கள் இவ்வாறு செய்வதாகவும் கூறிய அந்த குழுவினர், அந்த மீனை மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டுள்ளனர். பணத்திற்காக அந்த மீனை கொல்லாமல் மீண்டும் கடலுக்குள்ளேயே விட்ட அந்த குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்படுங்கள் - சஞ்சு சாம்சனுக்கு வந்த அழைப்பு

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

'Captain the Irish Cricket Team' - Call to Sanju Samson

 

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2015ம் ஆண்டிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். ஆனால் கடந்த 7 ஆண்டுகாளாக 16 டி20 போட்டிகளிலும் 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சனுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பினை மறுத்து வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அயர்லாந்து நாட்டின் குடியுரிமை, கார், வீட்டு வசதி இந்திய கிரிக்கெட் நிவாகம் வழங்கும் சம்பளத்திற்கு நிகராண ஊதியம் என அனைத்தையும் வழங்கி தங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்துள்ளது.

 

மேலும் அயர்லாந்தின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் சஞ்சு சாம்சன் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

 

அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தும் சஞ்சு சாம்சன் அதை நிராகரித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


 

Next Story

வாட்ஸ்அப்பிற்கு 1900 கோடி அபராதம் விதித்த நாடு!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

whatsapp

 

அயர்லாந்து நாடு, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 900 கோடியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு தனியுரிமை விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு பேஸ்புக்கோடு அந்த தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்குத் தெரிவிக்க தவறியதால் வாட்ஸ்அப்பிற்கு இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அயர்லாந்தின் தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.