ADVERTISEMENT

23 கேரட் 'தங்க பிரியாணி' - ஒரு பிளேட் எவ்வளவு தெரியுமா?

10:17 AM Feb 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பிரியாணி' எனும் உணவு வகை உலகம் முழுதுவம் பிரசித்திபெற்ற ஒன்று. அதேபோல் மக்களால் அதிகம் விரும்பும் அசைவ உணவில் ஒன்று. அசைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல சைவ பிரியர்களின் பிரியாணி மோகத்தை தீர்க்கவும் வெஜிடபிள், மீல் மேக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பிரியாணி உணவு தயாரிக்கப்படுகிறது. பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றியது. அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் பிரியாணி தெற்காசியாவுக்கு வந்தது. பிரியாணி என்னும் சொல் ‘வறுத்த’ என்ற பொருள்படும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. ஆனால் இன்று நாம் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவைக் குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள்.

தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் பிரியாணியை விரும்பி உண்கிறார்கள். இந்நிலையில் உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி ஒன்றை உணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. துபாயில் இயங்கிவரும் 'பாம்பே போரோ' எனும் ரெஸ்டாரெண்டில் ‘ராயல் பிரியாணி’ என்ற பெயரில் தங்க பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரியாணியில், சாப்பிடக் கூடிய 23 கேரட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. 'பாம்பே போரோ' ரெஸ்டாரெண்டின் முதல் வருட கொண்டாட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பிரியாணியின் விலை 270 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு பிளேட் தங்க பிரியாணி வாங்கினால் 6 பேர் தாராளமாக சாப்பிலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் பல பணக்கார்கள் அதிக நாள் வாழ தங்க பஸ்பம் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். இனி அந்த பட்டியலில் இடம்பெறப்போவது தங்க பிரியாணியும்தான் போல...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT