/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pak election_0.jpg)
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பலுசிஸ்தான் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பலுசிஸ்த்தான் வாக்குச்சாவடியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொது தேர்தலூக்காக நடைபெற்ற அவாமி கட்சியின் பிரச்சாரத்தின் போதே இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 110 பேர் பலியாகினர். 200க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இதனால், இத்தேர்தலுக்கு இராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அப்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டும் குண்டுவெடிப்பு சம்பவசம் நடந்துள்ளது, உலகமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us