பெரு நாட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் தீ பற்றி எறிந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
பெருவின் லிமா நகரில் இருந்து சிக்லேயோ நகர் நோக்கி சென்ற அந்த பேருந்தில் 35 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென பேருந்தில் புகை சூழ்ந்து, தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து தீப்பிடித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 25 அன்று, மத்திய பெருவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.