எவரெஸ்ட் சிகரத்திற்கு இணையான அளவு கொண்ட விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருகிறது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு விண்கல்லானது வரும் 27ஆம் தேதி பூமியை நெருங்க இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 25 லட்சம் மைல் தொலைவில் இந்த விண்கல் வரும் என்பதால் இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த விண்கல்லானது பூமியை நெருங்கி வந்தது. இதனால் இந்த விண்கல்லுக்கு 1989 ஜெ.ஏ என பெயர் சூட்டப்பட்டது. 33 ஆண்டுகள் கழித்து 1989 ஜெ.ஏ மீண்டும் பூமியை நெருங்கிவர இருக்கும் நிலையில் நாசா விஞ்ஞானிகள் இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.