Skip to main content

4 மாடி கட்டிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 18 பேர் பலி... மேலும்...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

சிரியாவில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

 

18 people lost their life in blast happend in syria

 

 

சிரியாவின் இட்லீப் மாகாணத்தில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர், 18 பேர் பலியாகியுள்ளனர். அல்கொய்தா அமைப்பின் மறைமுக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 முதல் சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டு போரில் இது வரை சுமார் 4 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

சூடானில் உள்நாட்டுப் போர்; இந்தியர் பலி

Published on 16/04/2023 | Edited on 16/04/2023

 

Civil War in Sudan; Indian passed away

 

சூடானில் நடந்த உள்நாட்டுப்போரில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். 

 

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

 

அப்போதில் இருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள் நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் நேற்று சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் போர் நடந்து வருகிறது. சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது.

 

தொடர்ந்து நடந்த போரில் பொதுமக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்தியர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ட்விட்டரில் தூதரகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு ஆல்பர்ட் ஆஜெஸ்டின், நேற்று வழி தவறிய புல்லட் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலதிக ஏற்பாடுகளைச் செய்ய குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக இந்திய தூதரகம், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாக செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 


 

Next Story

"நாம் ஒன்றிணைவோம்" - பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்னி லியோன் உதவி

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Sunny Leone help to Turkey earthquake victims

 

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் தற்போது வரை 46,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.   

 

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கள் நிறுவனம் ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு எங்கள் வருவாயில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கவுள்ளோம். 

 

நாம் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக இழந்ததை நம்பிக்கையோடு மீட்டெடுக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு கை கொடுங்கள். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க எங்களுடன் சேர்ந்து உதவுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் தொடர்ந்து அனாதை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அதையடுத்து தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.