Skip to main content

வீடியோ கேம் விளையாடி 20 கோடி ரூபாய் பரிசு வென்ற 16 வயது சிறுவன்...

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபோர்ட்நைட் கேம் உலக சாம்பியன் போட்டியில் கைல் என்ற 16 வயது சிறுவன் 20 கோடி ரூபாய் பரிசு வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 

16 year old teen wins 3 million by playing fortnite

 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஃபோர்ட்நைட் கேம் உலக அளவில் மிக பிரபலமானது. இந்த விளையாட்டை கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைனில் விளையாடி வந்தனர். எனவே இதற்கென ஒரு உலகக்கோப்பை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும் உலகம் முழுவதிலுமிருந்து 30 க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த 40 கோடி பேர் இதில் பங்கேற்க விண்ணப்பித்தனர்.

இதன் இறுதி போட்டி நேற்று நியூயார்க் நகரில் நடந்தது. இதில் கைல் என்ற 16 வயது சிறுவன் அனைவரையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 6 பிரிவுகளாக நடைபெற்ற இந்த கேமில் சாம்பியன் பட்டம் வென்ற சிறுவன் 3 மில்லியன் டாலரை பரிசாக பெற்றுள்ளான். இன்று வரை உலக அளவில் அதிக பணம் செலவு செய்யப்பட்ட கேமிங் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம்...

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளார்.

 

emergency state declared in newyork

 

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த வைரஸ் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் சுமார் 7000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 500க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 89 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளார். 

 

 

Next Story

'குளோபல் கோல்கீப்பர்' விருதை பெற்றார் பிரதமர் மோடி!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு இரு நாட்டு தலைவர்களும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50,000 பேர் கலந்து கொண்டனர். 

india pm narendra modi get it goal keepers award 2019


இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

india pm narendra modi get it goal keepers award 2019


அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'தூய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 'குளோபல் கோல்கீப்பர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உலக பணக்காரர்களில் ஒருவரும், அறக்கட்டளையின் நிறுவனருமான பில்கேட்ஸ் பிரதமருக்கு வழங்கினார்.