
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ரயில்வே சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நியூயார்க்கின் ரூக்ளின் நகர ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் காலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் சந்தேகப்படும் வகையில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் கண்ணீர் புகை குண்டு ஒன்றை வீசி பொதுமக்களை நிலைகுலைய வைத்தார். அதனைத்தொடர்ந்து திடீரென அந்த நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர். மக்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us