Advertisment

லண்டனில் 1547 கி.மீ சைக்கிளிங் - அசத்தும் தமிழ்நாட்டு இளைஞர்

Advertisment

ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் ரத்னா குமார்(35) சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்டு, சென்னை - மகாபலிபுரம் வரை சைக்கிளிங், ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் சைக்கிளிங் செய்து வந்தார். இந்நிலையில், தற்போது லண்டனில் இருந்து எடின்பர்க் வரை சைக்கிளிங் செய்துள்ளார். லண்டனில் இருந்து எடின்பர்க் 1547 கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. ரத்னா குமார், தமிழ்நாடு டி.ஐ.ஜி. சைலேந்திர பாபுவுடனும் சைக்கிளிங் செய்துள்ளார்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் இருந்துவந்துள்ளது. இதனை அவரது பெற்றோர் கண்டறிந்து ஊக்குவித்துவந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே அவர் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும், தூர சைக்கிள் பயணங்களிலும் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தான் தற்போது, புதிய சாதனை படைக்க திட்டமிட்டு லண்டனில் இருந்து எடின்பர்க் வரையிலான சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

london
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe