1500 bones found in osaka

ஜப்பானின் ஒசாகா பகுதியில் சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட 1500 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Advertisment

ஒசாகா பகுதியில் அமைந்துள்ள ‘உமேடா கல்லறை' என்ற இந்தப் பகுதியில் 350 சிறிய கல்லறைகளையும், நான்கு பன்றிகள், குதிரைகள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 1500 மனித உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் எலும்புகளில் நோய்க்கிருமிகள் தாக்கம் தென்படுவதால் 160 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியைத் தாக்கிய எதாவது ஒரு தொற்றுநோயின் காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்திலிருந்த உலகின் முக்கியத்துவம் வாய்ந்த ஏழு கல்லறைகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment