15 வயதிலேயே என்ஜினியரான இந்திய சிறுவன்... 

15 usa engineer

15 வயதுடைய இந்தியவாழ் அமெரிக்க சிறுவன் உயிரி பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

தனிஷ்க் ஆப்ரஹாம் என்னும் 15 வயது சிறுவன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியல் படிப்பை பயின்று வந்தார். தற்போது இப்படிப்பில் பட்டம் பெற்றுவிட்டு, பிஎச் டி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து தனிஷ்க் கூறும்போது," நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இது எனக்கு உற்சாகமும், பெருமிதமும் அளித்து இருக்கிறது" என்றார். தீக்காயம் அடைந்த நோயாளிகளின் உடலை தொடாமலேயே அவர்களின் இதயத்துடிப்பை அறிந்துகொள்ள உதவும் கருவியை தனிஷ்க் வடிவமைத்துள்ளார்.

இவரது தந்தை பிஜூ ஆப்ரஹாம், சாப்ட்வேர் என்ஜினியர். தயார் தாஜி ஆப்ரஹாம், கால்நடை மருத்துவர். இவர்கள் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். கால்நடை மருத்துவரான தனிஷ்க்கின் தாயார், அவரை பார்த்துக்கொள்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

America India
இதையும் படியுங்கள்
Subscribe