Skip to main content

சஹாராவிற்கு விரட்டியடிக்கப்பட்ட 13 ஆயிரம் ஆப்ரிக்க அகதிகள்!!;உணவின்றி செத்துகுவியும் மக்கள்!!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

 

refugees

 

 

 

ஆப்ரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் ஆப்ரிக்காவின் நைஜீரியா மற்றும் சோமாலியவை சேர்ந்த மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு வெளியிரும் சம்பவம் அதிகரித்துள்ளது. இப்படி அகதிகளாக சொந்த இடங்களை விட்டு பிழைப்புதேடிவரும் மக்களை விரட்டிவிடும் போக்கை ஐநாவின் மனித உரிமை ஆணையம் வன்மையாக கண்டித்துள்ளது.

 

அண்மையில் நடந்து வரும் ஆப்ரிக்க உள்நாட்டு போரினால் நைஜீரியா மற்றும் சோமாலியவை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அப்படி இருக்க அண்மையில் அகதிகளாக சென்ற மக்களில் 13 ஆயிரம் பேரை அல்ஜீரியா அரசு நாட்டிற்குள் புகவிடாமல் சஹாரா பாலைவனத்திற்கு விரட்டியடித்துள்ளது. பாலைவனத்தில் விரட்டிக்கப்ட்ட அகதிமக்கள் குடியிருப்பு வசதிகள் உணவு போன்ற எந்த அடிப்படை வசதிகளுமின்றி வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் என ஏராளமானோர் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றனர்.

 

 

 

அல்ஜீரிய அரசின் இந்த மனிதன்மையற்ற போக்கை ஐநா மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பிரித்துவைக்கும் ட்ரம்பின் நடவடிக்கைக்கும் ஐநா மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பல சர்வதேச எதிர்ப்புகள் அமெரிக்காவிற்கு குவிய டிரம்ப் குழந்தைகளை பிரித்துவைக்கும் கொள்கையை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Next Story

பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

nn

 

40 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானமானது ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தான்சானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில்  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் சிறிய பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  வானில் சுமார் 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எஞ்சின் பழுதடைந்து எதிர்பாராத விதமாக ஏரிக்குள் பாய்ந்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.