வெப்பநிலை உயர்வின் காரணமாக கிரீன்லாந்து நாட்டில் ஒரே நாளில் 1100 கோடி டன் பனிக்கட்டி உருகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

11 billion ton ice sheet melted in greenland

Advertisment

Advertisment

ஐரோப்பா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், கிரீன்லாந்து நாட்டில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. அந்நாட்டு தட்பவெப்பப்படி இது அங்கு அதிகபட்ச வெப்பநிலை ஆகும். இந்த வெப்பநிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்நாட்டில் 10 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கிரீன்லாந்து நாட்டில், கோடைக்காலத்தின்போது வழக்கமாக 50 சதவீத பனி உருகுவது வழக்கம். தொடர்ந்து வரும் குளிர்காலத்தில் மீண்டும் ‌பனி உறைந்து விடுவதுண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள உருகுதல் என்பது மிக அதிகமான அளவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உருகிய இந்த பனிப்பாறைகள் நீராகி அட்லாண்ட்டிக் கடலில் கலப்பதனால் கடல் நீர் மட்டம் உயர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணங்களின் ஒன்றான புளோரிடா மாகாணம் முழுவதையும் கிட்டத்தட்ட ஐந்து அங்குல நீரில் மூடும் அளவிற்கான நீர் நேற்று ஒரு நாளில் உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.