Skip to main content

101 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் மீண்டும் மிதந்து வந்த அதிசயம்...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

101 ஆண்டுகளுக்கு முன்பு நயாகரா ஆற்றில் மூழ்கிய கப்பல், தற்போது அங்கு அடித்த சூறாவளியால் மீண்டும் வெளியே வந்து மிதக்க ஆரம்பித்துள்ளது.

 

101 year old dislodged boat found in niagara river

 

 

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஓடும் நயாகரா ஆற்றில் கடந்த 1918-ம் ஆண்டு இரண்டு மாலுமிகளுடன் சென்ற படகு ஒன்று பாறைகளில் மோதியது. எவ்வளவு முயற்சி செய்தும் கப்பலை காப்பாற்ற முடியாத நிலையில், அதில் பயணம் செய்த இருவரும் கப்பலை விட்டுவிட்டு உயிர் தப்பியுள்ளனர். அதன் பிறகு அந்த படகு நதியின் 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்தால் 101 ஆண்டுகள் நதிக்கு அடியிலேயே சிக்கியிருந்துள்ளது அந்த படகு.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் அடித்த பலத்த சூறாவளி காற்று காரணமாக பாறைகளுக்குள் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு தற்போது நீர்வீழ்ச்சிக்கு அருகில் மிதந்து வருகிறது. விரைவில் இது நீர்வீழ்ச்சியிலிருந்து அடித்து செல்லப்படும் என்பதால் இந்த அதிசயத்தை பார்க்க அப்பகுதியில் ஏரளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூருவில் வானில் ஏற்பட்ட திடீர் சத்தம்... அலறியடித்து ஓடிய மக்கள்.. காரணம் என்ன..?

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

sonic boom in bengaluru

 

பெங்களூருவில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் சத்தத்தை நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெங்களூரில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வைட்ஃபீல்ட் பகுதிக்கு அருகில் ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. நகரின் பல பகுதிகளிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டதால் அச்சமைடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். ஐந்து விநாடிகள் வரை இந்தச் சத்தத்தை உணரமுடிந்ததாக பெங்களூரு மக்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனை நிலநடுக்கம் என மக்கள் கூறிவந்த நிலையில், இது நிலநடுக்கம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் சத்தத்திற்கு விமானப்படை விமானங்கள் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 


இந்தச் சம்பவத்தில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என பெங்களூரு நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் செல்லும் போது ஏற்படும் 'சோனிக் பூம்' எனும் நிகழ்வின் காரணமாக இந்த மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக போர் விமானங்கள் ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் போது, காற்றின் அதிர்வால் மிகப்பெரிய சத்தம் ஏற்படுவதே 'சோனிக் பூம்' என அழைக்கப்படுகிறது. எனவே, இதுவும் அதுமாதிரியான ஒரு நிகழ்வாகவே இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்வதற்காக பெங்களூரு போலீஸார் விமானப்படை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இருப்பினும் மிகப்பெரிய சத்தத்தைக் கேட்டு நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பெங்களூருவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 

 

Next Story

விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத தங்கை... போலீஸில் புகாரளித்த சிறுவன்... ஒரு சுவாரசிய சம்பவம்...

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

kerala boy complained police after his sister refused to play with him

 

தனது தங்கை உட்பட நான்கு சிறுமிகள் தன்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை எனச் சிறுவன் ஒருவன் காவல்துறையிடம் புகாரளித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 


கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் உமர். ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்குச் செல்லாத அந்தச் சிறுவன், தனது நண்பர்கள் வீட்டிற்கும் விளையாடச் செல்ல முடியவில்லை. இதனையடுத்து வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது தங்கை மற்றும் அவரது நான்கு தோழிகளிடம், தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளான் சிறுவன் உமர். ஆனால் அவர்கள் உமரை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்துள்ளனர். இதனையடுத்து நேராக வீட்டிற்குச் சென்ற சிறுவன், தங்கை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாததால், போலீஸில் புகாரளிக்கப் போகிறேன் எனக் கோபத்துடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்ட பெற்றோர், தங்களது அன்றாட வேலைகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுவன் உமர், நான்கு சிறுமிகள் தன்னை விளையாடச் சேர்த்துக் கொள்ளவில்லை என, தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் அளித்துள்ளான். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனைப் படித்த காவலர்கள், அந்தச் சிறுவனுக்கு உதவ எண்ணி, அச்சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று, தங்கையிடம் உமரை விளையாடச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி சென்றுள்ளனர். விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாதத் தங்கை மீது எட்டு வயது சிறுவன் காவல்துறையில் புகாரளித்த சம்பவம் அப்பகுதியில் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகிறது.