ADVERTISEMENT

100 வருடம் பழைமை வாய்ந்த சிவன் கோயில் - பாகிஸ்தானில் புதுப்பிப்பு! 

09:54 AM Jan 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு பழமையான இந்து கோயில்களும் உள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில், புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்றழைக்கப்படும் அந்தக் கோயிலின் நிர்வாகம் உள்ளூர் இந்து அமைப்பிடம் தரப்பட்டுள்ளது.

சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவில் உட்பட, பாகிஸ்தானில் உள்ள பல இந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெஷாவரில் உள்ள இந்து கோவில்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தானின் 'வெளியேற்றப்பட்டவர்கள் அறக்கட்டளை சொத்து வாரியம்' தெரிவித்துள்ளது. இந்த அறக்கட்டளை பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT