இந்தியாவின் அண்டை நாடானபாகிஸ்தானில், 70 லட்சத்திற்கும் மேற்பட்டஇந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு பழமையான இந்து கோயில்களும் உள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானில்126 ஆண்டுகள்பழைமை வாய்ந்த சிவன்கோயில், புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர்என்றழைக்கப்படும் அந்தக் கோயிலின்நிர்வாகம்உள்ளூர் இந்து அமைப்பிடம்தரப்பட்டுள்ளது.
சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவில் உட்பட, பாகிஸ்தானில் உள்ள பல இந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெஷாவரில் உள்ள இந்து கோவில்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தானின்'வெளியேற்றப்பட்டவர்கள் அறக்கட்டளை சொத்துவாரியம்' தெரிவித்துள்ளது. இந்த அறக்கட்டளை பாகிஸ்தானில்உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களைநிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.