ADVERTISEMENT

கரோனாவுக்கு எதிராக 100 சதவிகித பலன்... அமெரிக்காவின் 'மாடனா' தடுப்பு மருந்து! 

06:20 PM Nov 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தடுப்பு மருந்து தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள், உலகளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் 'மாடனா' நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து, 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'மாடனா' நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து, 94 சதவிகிதம் கரோனா ஏற்படுவதை தடுப்பதாக, ஏற்கனவே ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்பொழுது, தொற்று ஏற்பட்டபின் கரோனா தீவிரமடைவதை 100 சதவிகிதம் தடுத்து, பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இந்தத் தடுப்பு மருந்திற்கு அனுமதிகேட்டு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏவிடம் இன்று விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தத் தடுப்பு மருந்தினை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும் எனவும், இந்திய ரூபாய் மதிப்பில், 'மாடனா' தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலை 1,500 ரூபாய் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT