10 indians deported from singapore for violating corona curfew

கரோனா ஊரடங்கு விதிகளை மீறி மது விருந்திற்காக ஒன்றுகூடிய 10 இந்தியர்களை நாடுகடத்தியுள்ளது சிங்கப்பூர்.

Advertisment

சிங்கப்பூரில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாகப் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும், ஊரடங்கு விதிமுறைகளும் அங்கு தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அமலிலிருந்த போது, அதனை மதிக்காமல், கடந்த மே 5-ஆம் தேதி சிங்கப்பூரில் கிம்கீட் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நவ்தீப் சிங், சஜன்தீப் சிங், அவினாஷ் கவுர் ஆகிய மாணவர்கள், ஒரு பெண் உட்பட 7 பேரை மது விருந்துக்காக தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

Advertisment

இதனை அறிந்த காவல்துறையினர் 10 இந்தியர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஒன்றாகக் கூடியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் கடும் அபத்தங்களை விதித்த சிங்கப்பூர் நிர்வாகம், அவர்களை நாடுகடத்தவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, மாணவர்கள் உட்பட அந்த 10 பேரையும் இந்தியாவுக்கு நாடு கடத்திவிட்டதாகவும், அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் போலீஸாரும் குடியுரிமை அதிகாரிகளும் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேபோன்ற சம்பவத்தில், 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.