Skip to main content

இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டே குளித்த இளைஞர்கள்... மடக்கி பிடித்த போலிசார்!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

ஹாலிவுட் படங்களில் மிஸ்டர் பீன் நடித்த படங்களில் சிரிப்பு காட்சிகள் அலாதியானது. ஒரு படத்தில் அவர் வேலைக்கு கிளம்புவதில் சிக்கல் ஏற்படவே அவசர அவசரமாக கிளம்பி அலுவலகம் செல்வார். அதற்காக அவர் வண்டியிலேயே குளிப்பார். இதே சம்பவம் தற்போது நிஜத்தில் நடைபெற்றுள்ளது.



சில தினங்களுக்கு முன்பு வியட்நாமின் ஹோமி பகுதியில் இரண்டு இளைஞர்கள் இதே போன்ற பாணியில் இருசக்கர வாகனத்தில் குளித்துக்கொண்டே வாகனத்தை இயக்கியுள்ளனர். இதை பார்த்த போக்குவரத்து காவலர்கள் அவர்களை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை. இதனால் அவர்களை கைது செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைந்தனர்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிணற்றில் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Two people loses theri livetrying to pick up a bike that fell into a well

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம். செங்கல் சூளை தொழிலாளியாக இருந்த ஸ்ரீ லிங்கம் கிணற்றில் விழுந்த பைக்கை எடுப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரும் கிணற்றுள் இறங்கி பைக்கை மீட்க முயன்ற போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததால் தண்ணீரில் ரசாயன கலப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுள் இறங்கி ஸ்ரீலிங்கம் மற்றும் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ - பைக் டாக்சிகளுக்கு தடை!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
ban on bike taxis in karnataka

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.