World Soil Day at the Agricultural Science Center
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் தினத்தையொட்டி, மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணமாக விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி, இயற்கை அங்கங்க உரங்கள், பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, மேலாண்மை ஒருங்கிணைந்த பண்ணையம், பசுந்தாள் பயிர்கள் சணப்பை, தக்கை பூண்டு, அவுரி, நவதானிய பயிர் பயன்படுத்துதல் உயிர் உரம், இயற்கை எரிவாயு ஆலையில் இருந்து பெறப்படும் நொதித்த அங்கக எரு, புளித்த ஆலை அழுக்கு உரம், ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக பேசினார்.
வேளாண்மை துணை இயக்குநர் வெங்கடேசன், உதவி இயக்குநர் முகமது நிஜாம் ஆகியோர் துறை வாரியாக மண்வள மேம்பாட்டு திட்டங்களையும் மண்வள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். பல்வேறு உர நிறுவனங்கள் தொழில்நுட்ப கையேடுகளையும், உரங்களையும் காட்சிப்படுத்தினர். வேளாண் முனைவர்கள் கண்ணன், சுகுமாரன், ஜெயக்குமார், காயத்ரி, கலைச்செல்வி ஆகியோர் வேளாண் தொழில்நுட்ப குறித்து பேசினர். உர நிறுவன மேலாளர்கள் அருள்மணி, துளசி லிங்கம், சின்னப்பன் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தென்னை மற்றும் முந்திரியில் எரு இடுதல் செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
Follow Us