working committee meeting of the Makkal Needhi Maiam Party was held today under Kamal Haasan.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, விருப்ப மனு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில், அக்கட்சிக்கு 235 தொகுதிகளிலும் பொது சின்னமாக டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தலைமையில் இன்று (24-01-26) செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள 12 தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us