வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில் சையத் இர்சாத் என்பவர் வைத்துள்ள பழைய மர கடை மற்றும் அதன் அருகில் உள்ள ரவி என்பவருக்கு சொந்தமான பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மரக்கடை தீபித்து எரிந்துள்ளது.
இதனால், பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 ஆட்டோக்கள், இரண்டு இருசக்கர வாகனம், இரண்டு கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அனைத்துள்ளனர். இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பழைய மரக் கடையில் சுமார் 5 லட்சமும், பார்க்கிங்கில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us