சிதம்பரத்தில் இட ஒதுக்கீட்டு உரிமை இயக்க மாநில செயற்குழு கூட்டம்  நடைபெற்றது.கூட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வ.பிரபுதாஸ் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் க. அருள்சங்கும், அமைப்புச் செயலாளர் சா.துரைமணிராஜன், மண்டல நிர்வாகிகள் ரா.அறிவழகன், வி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Advertisment

இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ப.அழகப்பன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றி பேசுகையில் மத்திய அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியான ரூ.7500 கோடி தொகையிலிருந்து மக்களுக்கு உரிமை தொகையாக வழங்கப்படுவது கண்டனத்திற்குரியது. இந்த நிதியை ஆதிதிராவிட மக்களின் வளர்ச்சி திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். 

Advertisment

கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் செ.ஜெயப்பிரகாஷ் (சென்னை), அ,ஆசியஜோதி, நிர்வாகிகள் கு.கலியபெருமாள், க.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் இன எழுச்சி ஒற்றுமையைக் காக்க வேண்டும், இட ஒதுக்கீடு உரிமையை மீட்பது, இடஓதுக்கீடு உரிமை குறித்து மாநிலம் முழுவதும் கிராமங்கள் தோறும் பரப்புரை மேற்கொள்வது, மாநிலம் முழுவதும் புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.