சிதம்பரத்தில் உள்ள அருள் நர்சிங் ஹோமில் இலவச மகளிர் நல சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி குறித்தும், எலும்புரை (Osteoporosis) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகப்பேறு மருத்துவர்கள் பிருந்தா, பத்மினி தலைமை தாங்கினர்.

Advertisment

சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் பவித்ரா பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பு மற்றும் HPV புற்றுநோய் தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார். எலும்பு நலன் மருத்துவர் மணிகண்ட ராஜன் எலும்பு நலம் குறித்தும் அதனை பாதுகாக்கும் முறை குறித்து பேசினார். அதனை தொடர்ந்து, முகாமில் இலவச பாப் ஸ்மியர் ஹீமோகுளோபின் ரேண்டம் பிளட் ஷுகர் பரிசோதனைகள் நடைபெற்றது.

Advertisment

முகாமில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆலோசனை, மார்பக சுய பரிசோதனை மற்றும் எலும்பு ஆரோக்கியம் குறித்த தனிப்பயன் வழிகாட்டல் வழங்கப்பட்டது. மேலும் எலும்பு அடர்த்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிப்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமிற்கு சில இளம் பெண்கள் தங்கள் பெற்றோருடன் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்த வந்தது, சமூகத்தில் நோய் தடுப்பு விழிப்புணர்வை உணர்த்தும் சிறந்த அடையாளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.