ஈரோட்டில் குடும்ப சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் அசோகபுரம், காரைக்காலன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சௌந்தர்யா (26). இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். ராஜா மெக்கானிக் கடை வைத்துள்ளார். மேலும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அந்தக் கடனை திருப்பி கட்டாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisment

இதனால் சௌந்தர்யா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். பின்னர் மீண்டும் ராஜா மனைவியை சமாதானம் படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவார். இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஜா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெக்கானிக் கடைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டு கதவு திறந்து இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது சௌந்தர்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்து ராஜா சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சௌந்தர்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே சௌந்தர்யா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.