திருப்பத்தூரில் நிர்வாணமான நிலையில் பெண் ஒருவர் இறந்த நிலையில் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (45) இவருடைய கணவர் ஜெயபாலன். சாவித்திரியும் கணவர் ஜெயபாலனும் இணைந்து வீட்டில் அடிக்கடி மது அருந்துவது வாடிக்கை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் இருந்து புகை வெளியேறியதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சென்று பார்க்கையில் வீட்டில் நிர்வாணமான நிலையில் சாவித்திரி உயிரிழந்து கிடந்தார். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மனைவி சாவித்திரியை கணவன் ஜெயபாலனே தீயவைத்து கொன்றாரா? அல்லது அப்பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் ஜெயபாலனை கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.