சேலம் மாவட்டம், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்.. கடந்த 23ம் தேதியன்று ஓர் இளம்ஜோடி போலீசிடம் தஞ்சமடைந்தனர். அந்த இளம் ஜோடி தாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், எங்கள் குடும்பத்தினர் எங்களை பிரிக்க பார்க்கிறார்கள் எனவும் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளனர். பரபரப்பான அடுத்த சில நிமிடங்களில் அந்த இளம்பெண்ணின் பெற்றோரும், மற்றொரு தரப்பினரும் அங்கு வந்தனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு நபர்.. அந்த பெண்ணுக்கு முறைப்படி தாலி காட்டிய முதல் கணவர் தான்தான் எனக்கூறி காவல் நிலையத்திலேயே அப்பெண்ணை தாக்க முயற்சித்துள்ளார். இடத்தி கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்.. அவர்களை தடுத்து நிறுத்தி ஸ்டேஷனில் இருந்து வெளியேற்றினர். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கொங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. 30 வயதான இவர்.. சின்ன திருப்பதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் போலீசில் தஞ்சம் அடைந்த அந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 2021ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. ஆனால், இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால்.. குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
இந்த சூழலில், ராமுவின் மனைவி அவருடைய கடையில் வேலை பார்க்காமல் வேறொரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளது. அப்போது, அவருக்கும் அங்குள்ள சிமெண்ட் கடையில் வேலை செய்யும் சின்னதிருப்பதியை சேர்ந்த ஹரிஷ்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம்.. நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி.. இருவருக்கும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், இதை தெரிந்துகொண்ட கணவர் ராமு.. தன் மனைவியை கண்டித்து தகராறு செய்துள்ளார். ஆனால், ஹரிஷ்குமாரை கைவிட விருப்பம் இல்லாத அப்பெண்.. கடந்த வாரம் ஹரிஷ்குமாருடன் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அங்கு அவர்கள் ஒரு கோவிலில் தாலி கட்டிக்கொண்டு தற்போது போலீசில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்.. முறைப்படி தாலி கட்டிய முதல் கணவருடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை சிறிதும் கண்டுகொள்ளாத அந்த இளம்பெண்.. தான் ஹரிஷ்குமாருடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். ஆனால், போலீசார்.. கணவரை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் இடமில்லை. ஒன்று கணவருடன் செல்லுங்கள் அல்லது உங்கள் பெற்றோருடன் செல்லுங்கள் என்று அந்த இளம்பெண்ணை எச்சரித்துள்ளனர்.
Follow Us