Advertisment

தமிழகத்தை உலுக்கிய தரமணிச் சம்பவம் : பெண்ணின் உடல் மீட்பு!

taramani-ins-inves

சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த பணி நடைபெறும் பகுதியில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் கௌரவ குமார் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர், தனது மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்தார். இத்தகைய சூழலில் தான், கடந்த 25ஆம் தேதி இரவு அந்த பகுதிக்கு வந்த கும்பல் ஒன்று அவரது மனைவி முனிதா குமாரியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. இதனைத் தடுக்க முயன்ற அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது. 

Advertisment

மேலும், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை பிரம்மாணி குமார் என மொத்த குடும்பத்தையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த சடலங்களை வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக வீசி சென்றது. இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி சென்னை அடையாறு இந்திராநகர் முதல் காலனியில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து இரத்தம் வருவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று  விசாரணை செய்தனர். அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, அதனடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

Advertisment

அதோடு குழந்தையின் சடலமானது மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மனைவியின் சடலத்தை  தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதாவது பெருங்குடி குப்பை கிடங்கில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் காவலர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். மற்றொருபுறம் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். 

inves-1

இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலரிடம் அடையார் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கந்தர் (33), நரேந்திர குமார்( 45), நவீந்திரநாத் (45), பிகாத் (24) உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இநிநிலையில் மூன்றாவது நாளாக இன்று (30.01.2026 நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது பெருங்குடி குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.

incident woman taramani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe