கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான கல்யாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 23ஆம் தேதியன்று காணாமல் போனதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கல்யாணியின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது புனித் என்ற நபர் பதிலளித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது காரை வாடகைக்கு எடுத்து கொண்ட கல்யாணி மொபைல் போனை காரிலேயே வைத்துவிட்டதாக புனித் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கரோடிகிராம் என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கிராம மக்கள் கண்டெடுத்தனர். அதன் பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அந்த உடல், கல்யாணி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விவசாய நிலம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தியதில், புனித்தின் விவசாய நிலம் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், புனித்தை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கல்யாணியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
கல்யாணியும் புனித்தும் கடந்த வாரம் பேஸ்புக் என்ற வலைத்தளத்தில் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் இருவரும், சில நாட்களிலேயே தங்களுடைய செல்போன் எண்களை பரிமாற்றிக் கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கடந்த 22ஆம் தேதி இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளனர். அதன் பின்னர், வாடகை கார் மூலம் ஹாசன் பகுதியில் இருந்து மைசூருக்கு கல்யாணியை புனித் அழைத்து வந்துள்ளார். சில இடங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு, கிருஷ்ண ராஹ சாகர் அருகே ஒரு ஒரு லாட்ஜ்ஜில் இருவரும் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கல்யாணி மீண்டும் உடல் உறவை தொடர விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், புனித் அதற்கு தயக்கம் காட்டியுள்ளார்.
அதன் பின்னர், அவர்கள் இருவரும் லாட்ஜ்ஜில் இருந்து வெளியேறி கே.ஆர். பீட் என்ற இடத்தை அடைந்துள்ளனர். அப்போது கல்யாணி உடலுறவு வைக்க வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தியதாகவும், கட்டேரகட்டாவில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு அழைத்து செல்லும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனித், ஒரு கல்லை எடுத்து கல்யாணியின் தலையில் அடித்து சம்பவ இடத்திலேயே கொலை செய்துள்ளார். அதன் பின்னர், கல்யாணியின் உடலை தனது கிராமமான கரோடிகிராஇற்கு கொண்டு சென்று தனது விவசாய நிலத்தில் புதைத்துள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து புனித் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலுறவை தொடர வற்புறுத்திய பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/26/kar-2025-06-26-18-12-54.jpg)