துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பும் போது பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் உயிரிழப்பு. சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்.
பெங்களூரைச் சேர்ந்த குடும்பத்தினர் சிறுவர்கள் உட்பட 6 பேர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொண்டு இன்று காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் தெள்ளூர் கூட்டுச்சாலையில் பயணிகளை ஏற்ற நின்ற வேலூரில் இருந்து பசுமாத்தூர் செல்லும் அரசு பேருந்து மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதில் ஷெரின் தாஜ் (28) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வேலூர் தீயணைப்பு துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினரின் உதவியோடு காரில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த முகமது அசார் (38), ஸ்நேத (27) மற்றும் மூன்று சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்விபத்தால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உயிரிழந்த பெண்ணிண் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இவ்விபத்து குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/03/ambulanceoriginal-2026-02-03-22-29-06.jpg)