சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகர்ப் பகுதியில் உள்ள 2வது பிரதான சாலையில் குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள வீட்டில் மருத்துவர் ஆனந்த் பிரதீப் , அவரது மனைவி சசிபாலா (வயது 58), இவர்களது மகள் மற்றும் மகன் ஆகிய 4 பேர் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் 4 பேரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டில் இன்று (30.10.2025) அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயானது வீட்டின் ஹால் மற்றும் அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ளது. அப்போது உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் வீடு முழுவதும் தீ பரவியதால் ஏற்பட்ட புகை காரணமாக வீட்டில் இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் அக்கம் பக்கத்தினர் தீ விபத்தை கண்டதும் உடனடியாக தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. எனவே இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சசிபாலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதன்பின்னர் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதே சமயம் வீட்டிலிருந்த ஆனந்த, அவரது குழந்தைகள் உள்ளிட்ட 3 பேரும் வீட்டில் இருந்த அறையின் உள்ளே சென்று கதவைப் பூட்டிய நிலையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தீவிபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சசிபலாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தீ விபத்து சம்பவத்திற்கு மின் கசிவு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/che-fir-house-2025-10-30-10-53-05.jpg)