5 வயது மகளை கொடூரமாகக் கொலை செய்து அவரது சடலத்திற்கு அருகிலேயே சிறுமியின் தாயும் அவரது ஆண் நண்பரும் போதைப் பொருள் சாப்பிட்டு உடலுறுவு வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ரோஷினி. இவருக்கு ஷாருக் என்ற நபருடன் திருமணமாகி 5 வயதில் சாய்னா என்ற மகள் இருந்தார். இதனிடையே, ஷாருக்குடன் 8 வருடங்களாக நண்பராக இருந்த உதித் என்ற நபருக்கும் ரோஷினிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (15-07-25) ரோஷினி காவல்துறைக்கு போன் செய்து, கணவர் ஷாருக் வெளியில் இருந்து கட்டிடத்தின் மீது ஏறி தான் வசித்து வந்த வீட்டுக்குள் வந்து சாய்னாவை கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாய்னாவின் உடலை மீட்டு விசாரணை நடத்த தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், ஷாருக் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவர் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும், 2 நாட்களுக்கும் மேலாக சிசிடிவி கேமரா காட்சிகளில் ஷாருக் காணப்படவில்லை. இருப்பினும், அந்த கொலையை யார் செய்திருப்பார் என்ற கேள்வியோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் பார்வை, ரோஷினி பக்கம் திரும்பியது. அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சாய்னாவை கொலை செய்தது தான் தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த 13ஆம் தேதி ஷாரூக் வீட்டில் இல்லாத நேரத்தில், சிகரெட், மது பாட்டில் மற்றும் உணவு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ரோஷினி வீட்டிற்கு உதித் வந்துள்ளார். அவர்கள் இருவரும், படுக்கறையில் உடலுறவு வைத்துக் கொண்டிருந்ததை சாய்னா தற்செயலாக பார்த்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரோஷினி மற்றும் உதித் ஆகிய இருவரும், சாய்னாவை பிடித்து கைக்குட்டையால் வாயை பொத்தியுள்ளனர். இதையடுத்து உதித், தனது காலால் சாய்னாவின் வயிற்றில் அழுத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் சாய்னா பரிதாபமாக உயிரிழந்தார். சாய்னாவை கொலை செய்த பிறகு, எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருவரும் குளியலறையில் குளித்துவிட்டு மது மற்றும் போதைப் பொருளை உட்கொண்டுள்ளனர்.
அதன் பின்னர், உதித் வாங்கி வந்த உணவை இருவரும் சாப்பிட்டு சாய்னாவின் சடலத்திற்கு அருகே உடலுறவு வைத்துக் கொண்டு படுக்கறையில் உறங்கியுள்ளனர். கொலை பழியை கணவர் ஷாரூக் மீது போட்டுவிட்டால் அவர் சிறைக்கு சென்றுவிடுவார். அதன் பிறகு தனது ஆண் நண்பர் உதித்துடன் வாழ்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று எண்ணிய ரோஷினி, தனது கணவர் கொலை செய்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து உதித் மற்றும் ரோஷினி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/16/up-2025-07-16-19-02-07.jpg)