திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் கிடந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள கழிக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சக்திவேல்-அம்சா தம்பதி. கடந்த மாதம் அக்டோபர் 15ஆம் தேதி அம்சா தன்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனப் பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அடுத்த நாள் சாலையில் குழந்தையை விட்டுவிட்டு அம்சா மாயமாகிவிட்டார். குழந்தை ஒன்று சாலையில் சுற்றித் திரிவதைக் கண்ட வாகன ஓட்டிகள் குழந்தையை மீட்டு தந்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.
அம்சா எங்கே போனார் என்பது குறித்து பல்வேறு இடங்களிலும் சக்திவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் கிடைக்கவில்லை. அதனால் காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அம்சாவை போலீசார் தேடி வந்தனர். பெண் காணாமல் போனது குறித்து ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி மற்றும் நேத்ரா ஆகிய இருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/063-2025-11-08-21-47-57.jpg)
அப்பொழுது ஓட்டுநர் திருப்பதியும், நேத்ராவும் வாடகை வீட் டிற்கு அழைத்துச் சென்று அவருடைய கழுத்திலிருந்த நான்கு பவுன் நகைகளை பறித்ததோடு கழுத்தை நெரித்து கொலை செய்து தெரிய வந்தது.ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி அம்சாவிற்கு முன்பே பழக்கமாகி இருந்த நண்பர் என்பதும் தெரிந்தது. சடலம் எங்கே என போலீசார் நடத்திய விசாரணையில் சாக்கு மூட்டையில் கட்டி ஆட்டோவில் கொண்டு சென்று விழுப்புரம்-திருவண்ணாமலை புறவழிச்சாலையில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வீசியதாக தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இருவரையும் அழைத்து சென்ற போலீசார் சாக்கு மூட்டையில் கட்டிய படி கிடந்த அம்சாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நான்கு சவரன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/08/062-2025-11-08-21-47-02.jpg)