Advertisment

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக பிரமுகரின் கதையை முடித்த பெண்!

WhatsApp Image 2025-12-06 at 4.19.01 PM(1)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாரசந்திரத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஹரீஷ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அ.தி.மு.க. பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், வட்டிக்கு பணம் கொடுத்தல் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி காலை ஹரீஷ் வானவில் நகர் அருகே சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இந்தக் கொலை தொடர்பாக அட்கோ போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஹரீஷுக்கும், ஓசூர் வானவில் நகரைச் சேர்ந்த 35 வயதான மஞ்சுளா என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

Advertisment

மஞ்சுளா கணவரைப் பிரிந்து மகன், மகளுடன் வசித்து வந்தார். 2-ம் தேதி இரவு கடைசியாக அவரது வீட்டிற்கு ஹரீஷ் சென்று சாப்பிட்டுச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. 

Advertisment

மஞ்சுளா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஹரீஷுடன் மஞ்சுளாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்க, திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போன்று வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பாலியல் தொழிலுக்கு ஹரீஷ் உடந்தையாகவும், உதவியாகவும் இருந்துள்ளார். பின்னர் மஞ்சுளாவிடம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், இனிமே நீதான் என் உலகம், இந்தக் குழந்தைகள் நம்ம குழந்தைகள்என மஞ்சுளாவிடம் வர் பில்டப் கொடுத்து மஞ்சுளாவை ஹரீஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பின்னர் நைசாகப் பேசி, தனக்குக் கொஞ்சம் கடன் உள்ளது, அதை அடைத்துவிட்டால் நாம நிம்மதியா இருக்கலாம் எனக் கூறி மஞ்சுளாவிடம் பணம் கறக்க ஆரம்பித்தார். கேட்கும் போதெல்லாம் தனது தொழிலில் வரும் பணத்தை ஹரீஷுக்கு கொடுத்து வந்துள்ளார்.

50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஹரீஷுக்கு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஓசூர் கும்பார்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் என்பவருடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மோனிஷ் மஞ்சுளா வீட்டிற்கு வருவதும், பிள்ளைகளை கடைகளுக்கு அழைத்துச் செல்வதுமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த ஹரீஷ், மஞ்சுளாவிடம் எதற்கு அவன் இங்கு வரான், அவன் கூட உனக்கு என்ன தொடர்புஎனக் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் மோனிஷை இனி வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் தொழிலில் கைதான மஞ்சுளா, அதன் பின் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து மஞ்சுளாவும் ஹரீஷும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளாவைப் பிரிந்து சென்ற ஹரீஷ் மீண்டும் அவரிடமே தஞ்சமடைந்தார். அதன்பின் தினமும் மஞ்சுளாவிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதுடன், மீண்டும் பாலியல் தொழிலைத் துவங்கச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், மீண்டும் தொழில் செய்தால் எனது பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று மறுத்துள்ளார். ஆனால் விடாமல் ஹரீஷ் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுளா ஹரீஷைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒருவரை அணுகி ஹரீஷைத் தீர்த்துக்கட்ட பேரம் பேசி ஒன்றரை லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்கள் ஓசூர் வந்து ஹரீஷை பாலோ செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்களும் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து நடந்தவற்றை மஞ்சுளா மோனிஷிடம் கூறியுள்ளார். மேலும் “10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறேன் அவனை முடித்துவிடுங்கள்எனக் கூறியவர், “வேலை முடித்தால் தான் பணத்தைத் தருவேன், ஏன்னா ஏற்கெனவே இதே போல ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருக்கேன்எனக் கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட மோனிஷ் தனக்குப் பழக்கமான சென்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முரளியை அழைத்துப் பேசியிருக்கிறார். அதன்பின் பிஸ்மில்லா நகர் முகமதுரிஹான், பழைய மத்திகிரியைச் சேர்ந்த முஷ்ரப், சமீர், தொட்டகிரி முஜாமில், நேதாஜி நகர் அபி, சதீஷ், அஜித், உதய் உள்ளிட்டோருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி இரவு மஞ்சுளா வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்த ஹரீஷை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் தனது செல்போனில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஹரீஷை போட்டோ எடுத்துக்கொண்ட மோனிஷ், நேரடியாக மஞ்சுளாவிடம் சென்று போட்டோவைக் காண்பித்து பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் வைத்திருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்த மஞ்சுளா, மீதமுள்ள பணத்தை நாளை கொடுப்பதாகக் கூறி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் 3-ம் தேதி காலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அட்கோ போலீசார் உடலை மீட்டு விசாரணையைத் துவக்கினர்.

முதலில் மஞ்சுளாவைத் தட்டித்தூக்கிய போலீசார் அவரைக் காவல் நிலையத்தில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் முகமது ரிஹான், முஜாமில் ஆகியோர் கொலை செய்தது நாங்கள் தான்எனக் கூறி சரணடைந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி முஷ்ரப், சமீர், அபி என்கிற சதீஷ்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

வழக்கின் முக்கிய குற்றவாளியான மோனிஷ் மற்றும் முரளியை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் 5-ம் தேதி மோனிஷைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மஞ்சுளா, மோனிஷ், முகமது ரிஹான், முஷ்ரப், சமீர், முஜாமில், அபி என்கிற சதீஷ்குமார் ஆகிய 7 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முரளி, சதீஷ், அஜித், உதய் ஆகிய 4 பேரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கொலை நடந்த இடத்திற்கு வரப் பயன்படுத்திய 4 பைக்குகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

admk krishnakiri marriage
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe