தனது சகோதரியை காதலித்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மைத்துனரை பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கி அவரின் அந்தரங்க உறுப்பை சிதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் அருகே மெளயிமாவில் உள்ள மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் அசோரே. இவருக்கு உதய் மற்றும் 20 வயதான உமேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி உமேஷ் தனது அறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு வலியால் அலறி துடித்துள்ளார். இதனை கேட்ட குடும்பத்தினர், உடனைடியாக அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது உமேஷ் தாக்கப்பட்டு கடுமையான கத்திக்குத்து காயங்களுடன், அவரது அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisment

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் யார் அத்தகைய செயலைச் செய்தார்கள் அல்லது ஏன் செய்தார்ர்கள் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. முதற்கட்டமாக உமேஷின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உதய்யின் மனைவி மஞ்சு திடீரென மாயமானதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி, போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன.

உமேஷும் மஞ்சுவின் தங்கையும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாகி திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களது காதலுக்கு உமேஷின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், உமேஷ் அந்த பெண்ணை விட்டு விலகி வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தன்னை விட்டு வேறொரு பெண்ணை காதலித்து வருவதை எண்ணி மஞ்சுவின் தங்கை மன உளைச்சல் அடைந்துள்ளார். மேலும், இந்த நிராகரிப்பு அவரை ஆழமாக பாதித்துள்ளது. அவர் மனசோர்வடைந்து தன்னை தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். தனது சகோதரியின் துன்பத்தைக் கண்ட மஞ்சுவுக்கு, உமேஷ் மீது கோபமும் வெறுப்பும் வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உமேஷை பழிவாங்க வேண்டும் என்று மஞ்சு செயல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.

Advertisment

அதன்படி, கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கும் வரை மஞ்சு காத்திருந்துள்ளார். நள்ளிரவில் சமையலறையில் இருந்து ஒரு கத்தியை எடுத்து உமேஷின் அறைக்குள் மஞ்சு நுழைந்துள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த உமேஷை வெறித்தனமாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அவரது அந்தரங்க உறுப்புகளை துண்டித்துள்ளார். இதனால், உமேஷ் அலறி துடித்துள்ளார். இதனை கேட்டு குடும்பத்தினர் அறைக்குள் வருவதற்குள் மஞ்சு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த உமேஷை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் மஞ்சுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில்,மருத்துவமனையில் உமேஷுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அவசர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. விரிவான அறுவை சிகிச்சைக்குப் பிறகு உமேஷின் உடல்நிலை இப்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் முழுமையாக குணமடைய 7 முதல் 8 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.