Woman complains to Kanimozhi for bribes
ஆதார் அட்டையில் பெயர் மற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்பதாக தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பெண் ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி வருகை தந்தார். அப்போது பெண் ஒருவர், ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 பணம் கேட்பதாக கனிமொழியிடம் புகார் அளித்தார்.
அதில் அந்த பெண், ‘ஆதார் பெயர் மாற்றம் செய்ய ரூ.5000 கேட்கிறார்கள். எங்கு சென்றாலும் லஞ்சம் தான் கேட்கிறார்கள்’ என்று கூறினார். இதை கனிமொழி முழுவதுமாக கேட்டார். இதையடுத்து கனிமொழிக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர், பெண்ணின் பெயர் மற்றும் ஊரை கேட்டார். அதனை தொடர்ந்து, உடனடியாக வட்டாட்சியரை அழைத்து பெண்ணின் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது அந்த பெண் கனிமொழியிடம், ‘என்னுடைய ஓட்டு உங்களுக்கு தான் பயப்படாதீங்க’ என்று கூறினார். இதை கேட்டு கனிமொழி சிரித்துக் கொண்டே, ‘அதுவெல்லாம் பரவாயில்லை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றுக் கூறிச் சென்றார்.
Follow Us