Woman attacked, tied up, robbed of jewelry and money Photograph: (police)
திருவண்ணாமலையில் வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற பெண் தலைவரை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் இடையன்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் கோடீஸ்வரியை கயிற்றால் கட்டிப்போட்டு இரும்பு ராடால் தாக்கி வீட்டில் இருந்த எட்டு சவரன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். உடனடியாக இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த கோடீஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோப்ப நாய்களை திசைத் திருப்புவதற்காக கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டின் வாசலில் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிச் சென்றுள்ளனர். வீடு புகுந்து பெண் தாக்கப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.