அண்மையில் காஞ்சிபுரத்தில் திம்மசமுத்திரம் பகுதியில்  பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து அஸ்வினி என்ற பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த அஸ்வினி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் திருப்பத்தூரில் இதேபோல மர்ம நபர்கள் சிலர் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரேஷ்மா. வீட்டில் தனியாக இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மதியம் திடீரென வீட்டுக்குள் புகுந்து ரேஷ்மாவை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் ரேஷ்மா கூச்சலிட்ட நிலையில் பக்கத்திலிருந்த இரும்பு ராடை எடுத்து ரேஷ்மாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்த நிலையில் அங்கிருந்த அந்த மரம் நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Advertisment

உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரேஷ்மா அனுப்பி வைக்கப்பட்டார். பலத்த காயமடைந்த ரேஷ்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் திருப்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை முயற்சி காரணமாக வீட்டுக்குள் புகுந்த  மர்ம நபர்கள் பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.