நேர்காணலுக்கு வந்திருந்த வட மாநில பெண்ணை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மேகலையவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேர்காணலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. திருமணமான 30 வயது அந்த பெண்ணனை அந்த நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருந்த ராஜ் என்பவர் விடுதியில் தனியாக தங்கி இருந்த பெண்ணை மது போதையில் வாயைப் பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

போலீசார் விசாரணையில் அரக்கோணத்தைச் சேர்ந்த ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நட்சத்திர விடுதிக்கு வேலை தேடி நேர்காணலுக்காக வந்த வட மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.