திருப்பூர் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி செறியன் காடுதோட்டம் என்ற இடத்தில் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட விஜயா சிமெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான காற்றாலை ஒன்று இயங்கி வருகிறது. இக்கற்றாழையின் மாதாந்திர பராமரிப்பு பணிகளை ஏ.எம்.எஸ் என்ற தனியார் பராமரிப்பு நிறுவனம் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை காற்றின் வேகம் தாளாமல் காற்றாலையில் துண்டாக அடியோடு முறிந்து கீழே விழுந்து 6-துண்டுகளாகச் சிதறியது. சேதமடைந்த கற்றாழையின் மதிப்பு 3-கோடி ரூபாய் இருக்கும் என காற்றாலை நிறுவன ஊழியர்கள் தகவல் கூறுகின்றன. இந்நிலையில் காற்றாலை அமைக்கப்பட்ட இடத்தின் அருகே போடப்பட்டிருந்த மின் கம்பிகளும் காற்றாலை விழுந்த வேகத்தில் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு வெங்காயம் பயிரிட்ட காடுகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனையடுத்து, காற்றாலைகளை முறையாக பராமரித்து அதன் நிறுவனங்கள் இயக்க வேண்டும் எனக் கிராம மக்களின் சார்பில் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.