கரூர் துயரம் தேசத்தையே உலுக்கி எடுத்தது. 41 உயிர்கள் பலியானதற்கு யார் காரணம் ? என திமுகவும், விஜய் தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கூட கரூருக்கு செல்லாமல் சென்னைக்கு வந்துவிட்டார் விஜய். இது பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்திருந்தது.
இந்தநிலையில், 3 நாட்களுக்குப் பிறகு, கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்டார் விஜய். இந்த சூழலில், தமிழக கவர்னரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து கவர்னர் ரவியிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்க முயற்சித்து வருகின்றனர். இந்த வாரம் இந்த சந்திப்பு நடக்கலாம் என்கிறார்கள்.