சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் படுதோல்வியால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸுக்கு திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பலவீனப்படும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ''விஜய் நன்கு அறிமுகமான நபர் தானே. அவர் பிரபலமான நடிகர். காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கு எந்தவிதமான பார்மல் ரிலேஷன்ஷிப்பும் இருந்தது கிடையாது. ஆனால் ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கேன். ஒரு காலகட்டத்தில் இளைஞர் காங்கிரசில் செயல்பட வேண்டும் என்று விரும்பியதாகவும், அதற்காக சந்திப்பு நடந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்மல் ரிலேஷன்ஷிப் இருந்தது இல்லை'' என்றார்.

இதேபோல் கடந்த 18-11-25 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோதிமணி, “விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. அவர் 2010 யிலேயே ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணையவதற்கான வாய்ப்பு குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். ஆனால், அப்போது பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. அதனால் அவர் எங்களுக்கு தெரியாதவர் அல்ல'' என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment