பா.ஜ.க மத்திய சென்னை மேற்கு மாவட்ட அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி தெற்கு மண்ட தலைவியாக இருந்து வருபவர் ஜெயலட்சுமி. இவரை அப்பகுதியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கேள்வி கேட்ட அவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீங்கும் பணியை செய்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இவரது கணவர் பன்னீர்செல்வம் ஏற்கனவே தெற்கு மண்டல தலைவராக இருந்தவர். இவரது பதவி முடிந்த சூழ்நிலையில் மற்றொருவருக்கு கொடுக்காமல் மேலும் தாமே இருக்க வேண்டும் நோக்கத்தோடு ஐ.டி.யில் முழுநேரமாக பணிபுரிந்து வரும் அவருடைய மனைவியான ஜெயலட்சுமிக்கு பெற்றுத் தந்துள்ளார். அது போக பாஜக கட்சியில் மா.செ. பதவிக்கென வயது வரம்பு 45 ஆக உள்ளது. ஆனால், 52 வயதான ஜெயலட்சுமிக்கு பதவியை பெற்று கொடுத்துள்ளார்.
அதற்காக பாஜக முக்கிய நிர்வாகிகளுக்காக பணத்தைக் கொடுத்து கனகட்சிதமாக காரியத்தை முடித்துள்ளாராம். அந்த விவகாரத்தை வைத்து அப்பகுதி நிர்வாகிகள் அது எப்படி இப்படி செய்யலாம் அப்போ கட்சிக்காக உழைத்த எங்களுக்கு அந்த பதவி இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் உடனடியாக இது போன்று கேள்விகளை முன் வைத்த நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து, தன்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புக்கு தர முனைப்பு காட்டி வருகிறாராம்.
இது பற்றி முழு தகவலையும் பா.ஜ.க தலைமையிடம் சொல்ல முயற்சி செய்தும் தலைமையை சந்திக்கவே முடியாமலும், வாய்ப்பில்லாமலும் அண்ணாநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தவித்து வருகின்றார்களாம் .இப்படியே சென்றால் பா.ஜ.க.வில் ஏதோ ஒன்று இரண்டு பேர்தான் கட்சியில் இருக்கிறார்கள், அவர்களையும் இப்படி செய்தால் இந்த கட்சி அதோ கதிதான் என்கிறார்கள் பா.ஜ.க விசுவாசிகள் .